கே.எஸ். மணியம் சிறுகதைகள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயலட்சுமி
பதிப்பகம் :வல்லினம் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789671249864
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cartமலேசியாவில் பன்னெடுங்காலமாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களிடையே சுயத்தணிக்கை மனப்பான்மே அதிகம் இருப்பதை நூலகராக நான் பல தருணங்களில் அவதானித்ததுண்டு.பெரும்பாலும் குடும்பம், தோட்டம்,பாலியம், காமம் என மிகச் சுருங்கிய களங்களில் அவர்கள் சிறுகதைகள் உருவாவதைப் பார்த்துள்ளேன். அதிகாரத்துக்கு எதிராகவோ அரசியர் ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக்குரலாகவோ இனரீதியான பாராபட்சங்களுக்கு எதிர்வினையாகவோ இல்லாமல் தங்கள் மனதுக்குள் இருக்கும் ஒரு படுபயங்கர மாயச்சிறையில் எப்போதோ கைது செய்யப்பட்டு முடங்கிக் கிடப்பதுபோல அவர்கள் எழுத்துகள் அஞ்சி நடுங்கி வெளிபடுவதைச் சங்கடத்துடன் வாசித்துள்ளேன்.