குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். பாண்டியராஜன்
பதிப்பகம் :Nestling Books (india) Private Limited
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123436906
Out of StockAdd to Alert List
சுண்டெலிகள் அந்தக் காலத்தில் தான் பார்த்தவற்றில் இருந்து நிறைய கதைகளை
உருவாக்கின. கதைகள்தான் அதன் குழந்தைகள். ஒவ்வொரு கதையும் - அதாவது,
குழந்தையும் ஒரு சட்டை அணிந்துகொண்டிருந்தது - வெள்ளை, நீலம், சிவப்பு,
பச்சை மற்றும் கறுப்பு. அந்தக் கதைகள் எல்லாம் அந்தச் சுண்டெலியின்
வீட்டில் வசித்தன; சுண்டெலிக்கான வேலைகளை எல்லாம் அவை செய்தன. ஒரு நாள்,
சுண்டெலி வசித்த அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, ஒரு செம்மறி ஆடு
ஓடியது. அந்தக் கதவு, மிகவும் பழைய கதவு. எனவே, அது உடைந்துவிட்டது.
அதனால், கதைகள் எல்லாம் வெளியே ஓடிவந்துவிட்டன. இப்போது, இந்தப் பூமி
முழுவதும் மேலும் கீழுமாக அவை ஓடிவிளையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில்
சிலவற்றைக் கேளுங்கள்.