book

வியப்பூட்டும் அறிவியல் விளக்கங்கள்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலைத் தொண்டன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :32
பதிப்பு :2
Published on :2016
Out of Stock
Add to Alert List

   நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் கணக்கிலடங்காத அறிவியல் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் நாமறிந்த, அறிவியலர்களால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் மிகக் குறைவே. சுருங்கக் கூறின் அறிந்த உண்மைகளைவிட அறியாத ரகசியங்களே அதிகம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியலர் களின் பல்வேறு கண்டு பிடிப்புகளும், வெளிப்படுத்துதல்களும் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளது. மனித அறிவினைப் பெருக்கிட தூண்டுகோலாக அமைந்துள்ளது.

வானியல் சரித்திரத்தின் ஆரம்ப ஏடுகளை புரட்டும்போது, ""தட்டையான பூமி, நட்சத்திரங்கள் பொருத்தப்பட்ட வான் போர்வை'' என்பவைதான் வானியலைப் பற்றிய மனிதனின் எண்ணமாக இருந்திருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்றி சற்று வித்தியாசமாக சிந்திக்க துவங்கியவர்கள் கிரேக்கர்களே.

கி.மு. 500-இல் ஹெக்காடியஸ் என்ற கிரேக்கர் பூமி ஒரு வட்டம் என்ற கருத்தை முன்வைத்தார். இக்கருத்தினின்று சற்றே மாறுபட்டு கி.மு. 550-இல் அனாக்ஸிமாண்டர் முரண்பாடான பூமி உருளை வடிவமானது என்று கூறினார். இது சற்று முரண்பாடான கருத்தாக தோன்றியது. காரணம் கிரகணத்தின் போது சந்திரன்மீது விழும் வட்டவடிவ நிழல் பூமியின் நிழலோ என்ற சந்தேகம்தான். பூமி உருண்டை என்று முதன் முதலாக கூறியவர் ஃபைலோலாஸ் என்பவர்தான். கி.மு. 450-இல் அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இக் கருத்தினை ஆமோதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் இக்கருத்து இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மையாகவே இருந்து வருகிறது.

பூமி உருண்டையின் அளவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரட்டோஸ்தனிஸ் எளிய முறையில் கண்டுபிடித்தார். ஒரு இடத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இருக்கும்போது அவ்விடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் ஒரு குச்சியின் மீது விழும் சூரியக்கதிர்கள் உண்டாக்கும் நிழல் விழும் சாய்வை கணக்கிட்டு பூமியின் சுற்றளவு 2500 மைல். அதன் விட்டம் 8000 மைல்  என்றார். இது சற்று ஆச்சர்யமூட்டும் கணக்குதான். இன்றைய கணக்கு பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 24902.4 மைல். விட்டம் 7917.48 மைல்.

தன் இருப்பிடத்தை அறிந்துகொண்ட பண்டைய கிரேக்க அறிவியலர்களுக்கு வானில் நட்சத்திர அழகைப் பார்த்து இருப்பு கொள்ளவில்லை. இரவில் தெரிந்த நட்சத்திரங்கள் பகலில் மறைந்து கண்ணாமூச்சி காட்டியது. அவர்களின் மூளையை கிளறியது. வானில் நட்சத்திரங்கள் இடம் பெயரவில்லை. ஆனால் பெரிய நட்சத்திரமாக தெரிந்த கோள்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன என்பது புரியத்துவங்கியது.

நமக்கு அருகில் உள்ள கோள் சந்திரன் தான். எனவே சந்திரனை சுற்றி கிரேக்கர்களின் சிந்தனை சுழலத் துவங்கியது. அரிஸ்டார்க்கஸ் (கி.மு. 320-250) முதன் முறையாக சந்திரனின் தூரத்தை அளக்க முயற்சி மேற் கொண்டார். கிரகணத்தின் போது சந்திரன் மேல் விழும் பூமியின் நிழல் இவ்வளவு சிறிய தாக இருப்பின் அது எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டும் என்று அதிசயித்தார் அரிஸ்டார்க்கஸ். அவருக்குபின் வந்த ஹிப்பார்க்கஸ் (கி.மு. 190- 120) என்ற மிகச் சிறந்த கிரேக்க வானியலர் சந்திரனின் தூரத்தை நுட்பமாக கணக்கிட்டு பூமியின் விட்டத்தைப்போல் முப்பது மடங்கு இருக்கலாம் என்றார். சுமார் 24000 மைல் இருக்கலாம் என்று கணக்கிட்டார். (தற்போதைய கணிப்பு 238, 854.7 மைல்). பிறகு சந்திரனின் விட்டமும் தெரிய வந்தது. சுமார் 2160 மைல்.