book

நேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம்

₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரையன் டிரேசி
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387944039
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

‘ஈட் தட் ஃபிராக்' என்ற பிரபலமான நூலின் ஆசிரியரிடமிருந்து வந்துள்ள, வாழ்க்கையை மாற்றக்கூடிய இந்நூல், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதையும் நம்டைய வாழ்வின் பல விபரங்களை எவ்வாறு கையாள்வது என்பதையும் தீர்மானிப்பதற்கான ஒரு தனித்துவமான செயற்திட்டத்தை வழங்குகிறது.
'செய்யப்பட வேண்டிய வேலைகள்' பட்டியலில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிட்ட விஷயங்களை நம்மால் செய்ய முடியாமல் போவதற்கும், நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல முடியாமல் இருப்பதற்கும் ஒரே ஓர் எளிய காரணம்தான் உள்ளது. 'இது சரியான நேரம் அல்ல' என்பதுதான் அது. 'நேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம்' என்ற இந்நூலில், சர்வதேசப் பேச்சாளரும் பிரபல நூலாசிரியருமான பிரையன் டிரேசி, சரியான நேரத்தில் சரியான பணித்திட்டத்தைக் கையாள்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார். நம் வாழ்வின் முக்கியமான பகுதிகளில் நம்முடைய நேரத்தைப் பொருத்தமான வழியில் பயன்படுத்துவதன் மூலம் நாம் நினைத்ததைவிட அதிகமான விஷயங்களை மிக வேகமாகவும் அதிக சுலபமாகவும் நம்மால் அடைய முடியும். உற்பத்தித்திறன் தொடர்பான மிக சமீபத்திய ஆய்வின் அடிப்படையிலும், நூலாசிரியரின் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும், அவருடைய வாடிக்கையாளர்களின் அனுபவங்களின் அடிப்படையிலும் அமைந்துள்ள, பிரையன் டிரேசியின் வழிமுறை, நாம் பயன்படுத்துகின்ற பத்து வெவ்வேறு வகையான நேரத்தையும், நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு இவை ஒவ்வொன்றுக்கும் தேவையான தனித்துவமான அணுகுமுறையையும் கண்டறிவதை உள்ளடக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வேலையை எந்த நேரத்தில் நாம் செய்தால் நாம் அதிக ஆக்கபூர்வமாக இருப்போம், நம்முடைய பட்டியலில் உள்ள அடுத்த நடவடிக்கையை எப்போது நாம் மேற்கொள்ள வேண்டும் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எளிய விஷயங்களை இந்நூல் நமக்கு வழங்குகிறது. கூடவே, அதிகபட்ச உற்பத்தித்திறனை அடைவதற்கான ஒரு கட்டமைப்பையும் அது நமக்கு வரைகோடிட்டுக் காட்டுகிறது.