book

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (Stop the Domestic Violence)

₹375+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :388
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788194699132
Out of Stock
Add to Alert List

குடும்ப வன்முறை என்பது சமூகத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு நிகழ்வாகும். அது பெண்ணுக்கு எதிரான மிகவும் கடுமையான மனித உரிமை பிறலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியக்களுக்கென்று அடிப்படை உரிமைகளை அளித்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறிப்பாக உறுபுகள் 14, 15 மற்றும் 21-இன் கீழ் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கின்றது மற்றும் சமூகத்தில் குடும்ப வன்முறைகள் நிகழ்வறாது தடுக்கிறது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கு நீதிப் பேராணைகளைத் (writs) தவிர மற்றப்படி உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் எதுவும் கிடைக்காதிருந்தது. அதனால், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டமுன்வடிவு 22.8.2005-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது, மக்களவையில் 24.8.2005-ஆம் நான் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்கள் வையால் 29.8.2005-ஆம் நாள் இயற்றப்பட்டது. 13.9.2005-ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்பதல் பெறப்பட்டது. இந்தச் சட்டம் பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகளை அளிக்கிறது. பெண் ஒருவர் திருமண உறவின் மூலமாகவோ அல்லது இரத்தவழி உறவின் மூலமாகவோ ஒரு வீட்டில் வசித்துவரும் போது, அவருக்கு எதிராக அந்த வீட்டில் இருக்கின்ற ஆணோ, பெண்ணோ உடற்தீங்கையோ, உள்ளத் தீங்கையோ செய்வது அடிப்பது, உதைப்பது, காயங்களை எற்படுத்துவது சொத்துரிமையைப் பறிப்பது பெண்ணொருவர் தான் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாதபடி தடுப்பது, கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணை விருப்பத்திற்கு மாறாக மற்றொருவருக்குத் திருமணம் செய்து வைப்பது, பெண்ணொகுத்திக்கும் அவது குழந்தைகளுக்கும் சிவனாம்சம் அளிக்க மறுப்பது, உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை அளிக்க மறுப்பது ஆகியன குடும்ப வன்முறைகளாகும். இந்த வன்முறையிலிருந்து ஒருவரைப் பாதுகாப்பதற்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அல்லது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.