book

குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C)

₹360₹400 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :510
பதிப்பு :6
Published on :2018
Add to Cart

குற்ற விசாரணை முறைச் சட்டம், முதன் முதலில் 1882- ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது அதன்பிறகு 1898-ஆம் ஆண்டில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அது குற்ற விசாரணை முறைச் சட்டம், 1898 (சட்டம் 5/1898) ஆக இயற்றப்பட்டது. அதன்பிறகு 1928 ஆம் ஆண்டிலும் மற்றும் 1955-ஆம் ஆண்டிலும் குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிறகு 1973 -ஆம் ஆண்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 1973 (சட்டம் 2/1974) என்றதொரு புதிய சட்டம் இயற்றப்பட்டது அதன் பிறகு குற்றவிசாரணை முறைச் சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு மற்றும் 2013-ஆம் ஆண்டில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்றும் 2019 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டு அனைத்தையும் தாங்கி இப்போது வெளிவருகிறது எனது இந்த நூலை மொழியாக்கஞ் செய்திடுவதற்கு எனக்குப் பெரிதும் ஊக்கமும் ஆக்கமும் அளித்த எனது அருமை நண்பர் சேலம் கிரி லா ஹவுஸ் உரிமையாளர் ஜெ.ஆர். கிரிதரன் அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்