book

இந்தியாவைப் பற்றி

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்ல் மார்க்ஸ்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :568
பதிப்பு :2
Published on :2017
ISBN :9788189867669
Out of Stock
Add to Alert List

இங்கு விவசாயிகள் தனிப்பட்ட லேவாதேவிக்காரர்களால் சுரண்டப்படுகிறார்கள்; ஆனால், தமது நிலத்தில் விவசாயி களுக்கு பரம்பரை பாத்யமோ, நிரந்தரமான பட்டாவோ கிடையாது. பண்ணை அடிமைகளைப் போல் நிலத்தை உழுது பயிர் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்; அதே சமயத்தில், பண்ணை அடிமைகளின் தேவையைப் பூர்த்தி செய்வது போல், இவர்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. மிட்டாதாரரைப் போல் விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்ததை அரசுக்குப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும்; ஆனால், மிட்டாதாரர்களுக்குக் கொடுப்பது போல், விவசாயிகளுக்கு அரசாங்கம் நிதி போன்ற உதவிகளைச் செய்யவில்லை. சென்னை, பம்பாய் ஆகிய மாகாணங் களைப் போல் வங்காளத்திலும், ரயத்வாரி முறையைப் போல் ஜமீன்தாரி முறையின் கீழும், இந்தியாவின் மொத்த ஜனத் தொகையில் பன்னிரண்டில் பதினோரு பங்கினரான விவசாயிகள் படுமோசமான முறையில் ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.