book

உன்னைவிட இல்லை புதுமையே... (முதல் பாகம்)

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஷ்ணுப்ரியா
பதிப்பகம் :சிறகுகள் பதிப்பகம்
Publisher :Siragugal Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :404
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்!!

ஆன்லைனில் நான் எழுதிய மூன்றாவது கதை. "உன்னை விட இல்லை புதுமையே!!"

ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து தோன்றி வளர்ந்த.. இப்பூமியின் கடைசி ஜீவராசியும் சுகிக்கக் கூடிய ஒரே பொருள் காதல்!!

அத்தகைய காதல்... உள்ளுக்குள் மொட்டுவிட்டு அரும்பி, சுகந்தம் பரப்பும் ரோஜாவாக மலர்ந்த காதல்...காலம் கடந்த பின்னும் ஒரு ஆண்மகனுக்குள் விதைக்கும் விளைவுகளே இந்த கதை!!

கடந்த காலத்தில் தன் காதலையும், அதன் சுவடுகளையும் தொலைத்து விட்டு.. இறந்த காலத்திலேயே மூழ்கித் தவிக்கும் ஆண்மகன் ஆதிகேஷவ்!!

அவனுக்கு உதவும் கலியுக அர்ஜூனன் - கிருஷ்ண நட்பாய்
தோழன் கிஷோர்!!

உடலளவில் பல ஒற்றுமைகள் இருந்தாலும்... குணத்திலும், நடத்தையிலும் வேறுபட்ட இரு பெண்கள் விஷ்வமேக்னா, தாரிணி!!

இந்த இரு பெண்களில் யார் தன் காதலி எனக் கண்டு கொள்ள துடிக்கும் ஆதிகேஷவ்.. தன் காதலின் புதுமையை கண்டு கொண்டானா? என்பதே கதை மக்களே!!

அவர்கள் காதல் ரசத்தை.. நீங்களும் உள்நுழைந்து வாசித்து மகிழுங்கள்.