book

ஸ்ரீ ரமண மகரிஷி

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :360
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி புகழ் நாடெங்கும் பரவியது. வெளிநாட்டு அன்பர்கள் பலர் பகவானை நாடி வந்து, இந்தியாவின் ஆன்மீகச் செல்வத்தை உணர்ந்து கொண்டனர். காவல்துறையில் பணியாற்றிய எஃப்.எச். ஹம்ப்ரீஸ், காவ்யகண்ட கணபதி முனிவர் மூலம் பகவானுக்கு அறிமுகமானார். ஏற்கனவே கீழை நாட்டுத் தத்துவங்களிலும், சில வகைச் சித்துக்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த ஹம்ப்ரீஸ், ரமணரின் அருளாற்றலையும், அவர் ஒரு அவதார புருடர் என்பதையும் உணர்ந்து கொண்டார். தனது கட்டுரைகளின் வழியே இங்கிலாந்தில் பகவானின் புகழைப் பரவச் செய்தார். தொடர்ந்து உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் பலர் பகவானை நாடி வந்தனர். அவர்களுள் முக்கியமானவர் பால் பிரண்டன். ஞான வேட்கை கொண்டிருந்த அவர், முதலில் காஞ்சி மஹாப் பெரியவரைச் சந்தித்தார். பின்னர் அவர் மூலம் உபதேசம் பெற்று பகவான் ரமணரைச் சந்தித்தார். தனது சந்திப்பு அனுபவங்களை ஆங்கிலத்தில் ஒரு நூலாக எழுதி வெளியிட்டார். அவர் பகவானைப் பற்றி எழுதியதைப் படித்த பல ஐரோப்பியர்கள் பகவானை நாடி வரத் தொடங்கினர். அவர்களில் சிலர் ரமணருக்கே அடியவராகி, இந்தியாவிலேயே இறுதிவரை காலம் கழித்தனர். பகவானின் ஞான ஒளியில் தோய்ந்து ஆன்ம அனுபவம் பெற்றதுடன், தங்கள் அனுபவத்தை அவர்களும் எழுத்திலும் பதிவு செய்தனர்.