book

திருமூலரின் மனோசக்திக் கலை

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோக சித்தர் மானோஸ்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :360
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Out of Stock
Add to Alert List

இப்பொழுது ஒவ்வொரு சமூகத்திலும் வயதானவர்கள், வாலிபர்கள், இவர்களுடைய மனோநிலையும் தேகநிலையும் சரியான நிலையில் இருக்கவேண்டிய அவசியத்தைப் பற்றி ஒரு கவலை அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்தக் கவலை வெகுவாக முன்னேறியுள்ள தேசங்களிலும், முன்னேறிக் கொண்டிருக்கும் தேசங்களிலும் சமமாக உணரப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு இரண்டு பிரிவுகள் உள்ளன. அதாவது (1) எப்படி மனக்கோளாறுகளைத் தடுப்பது?; (2) எப்படி ஏற்கெனவே மனக்கோளாறு உள்ளவர்களை குணப்படுத்தி நல்ல நிலைமையில் இரு நிலைகளையும் நிறுத்தி நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவது. மனோசக்திக்கு வேண்டிய :மனோபலத்தைப் பெருக்குவது எப்படி?" என்ற தலைப்புல இப்புத்தகம் மனது சம்பந்தமான வியாதிகளைக் குணப்படுத்துவதற்கும் நல்ல மனோநிலையைக் கொடுப்பதற்கும், மனோசக்தியை அதிகப்படுத்துவதற்கும் அவசியமான எல்லோருக்கும் தெரிந்ததும், பரிசோதிக்கப் பட்டபின் நல்ல பயனுள்ளதுமான சில முறைகளை நமக்கு அளிக்கிறது.
 
குணப்படுத்துதல், தடுத்தல், புதிதாக அளித்தல் ஆகிய இம்மூன்று வித காரியங்களுக்கும் இப் புத்தகம் வகை செய்கிறது. மனக் கோளாறுகளுக்குக் காரணங்கள் எதுவாயினும் இம்முறையைப் பயன்படுத்தி ஒரு நோயாளி தன் பிணிகளை நீக்கி சரியான நிலையை அடைவதற்கு சக்தி அடைகிறான். நல்ல நிலைமையில் இருந்தபோதிலும் சில சமயங்களில் பதற்ற நிலையை அடைகிறவர்கள் மனக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இம்முறையை அனுசரித்தால் சீரழிவைத் தடுத்துத் திரும்பி நல்ல நிலையை அடையலாம். மனக்கோளாறுகளினால் பாதிக்கப்படாதவர்களும் ஏற்கெனவே நல்ல மன, தேக உறுதியிலிருப்பவர்களும் இம்முறையினால் நல்ல பயன் அடையலாம். அவர்கள் தங்களுடைய மனோவலிமையை அதிகமாக்குவதற்கு இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற முறைகளைப் பின்பற்றி நல்ல பலனை அடையலாம். மேலே சொல்லிய மூன்றுவித மனிதர்களுக்கும் இப்புத்தகம் நல்ல வழிகாட்டியாக அமையும். 
 
இப்புத்தகத்தின் தனித்தன்மை என்னவென்றால், நல்ல மனோநிலையை அடைவதற்கும், மனத்தை இளமையாக்குவதற்கும் அனுகூலமான நல்ல யோகாப்பியாசனங்களை விவரிக்கிறது.
 
பொருளடக்கம்: 
மூன்று  காரணங்கள்; 
மனோநிலையும் - ஞானயோகமும்;  
மனோபாவமும் - ஆவல்கள் பூர்த்தியாகும் முறையும்;  
மன ஆரோக்கியமும் - ஹதயோகமும்;  
யோகாசனம் பழகுவதற்கு ஆலோசனைகள்; 
சூரியநமஸ்கார ஆசனம்; 
ஆசனங்கள் (படவிளக்கத்துடன் ஆரம்பம்); 
மன ஒருமையும் மன ஆரோக்கியமும்; 
மனதின் தன்மையும் வேலைகளும்; 
பழக்கத்தின் முக்கிய அம்சங்கள்; 
பொருளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?; 
ஒழுங்காக மூச்சுவிடுதல் இழுத்தலின் முக்கியத்துவம்; 
மனதைச் சுத்தமாக்குதலும் நல்ல எண்ணங்களைப் பதியவைத்தலும்; 
தியானம்.
 
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசன இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.