book

உணவே மருந்து

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் திருமலை நடராஜன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :7
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஒவ்வொருவரும் நாழி அளவு உணவு உண்ண வேண்டும் என்பதும், ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை, இடையாடை என உடுத்தவேண்டும் என்பதும் அவர்தம் கொள்கை.
நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசாரக் கோவை, உணவு உண்ணும் போது கிழக்கு நோக்கி அமர்ந்து, உணவு உண்ண வேண்டும். நின்று கொண்டோ, படுத்துக்கொண்டோ, கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டோ உணவுண்ணக் கூடா தென்கிறது.உணவு உண்ட பின் நடை:உணவு உண்ட பின்னர், ஒவ்வொருவரும் சிறிது தூரம் நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பது உண்ட உணவு செரிமானமாவதற்கு உதவும் எனக் கூறப்படுகின்றது. நோயாளி உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துவர்.உணவு உண்ட பின்னர், நூறடிதூரம் உலாவி விட்டு வரவேண்டுமென்று மருத்துவ நூல் கூறு கின்றது. அதற்கு ஏற்றவாறு, உணவு மண்டலம் நூறடி நீள நடை மண்டபத்துடன் அமைக்கப் பட்டிருப்பதாகவும், சீவக சிந்தாமணி உரையா சிரியர் நச்சினார்க்கினியர் உரைக்கக் காணலாம்.இக்கருத்தை ஒட்டியே வள்ளல் இராமலிங்க அடிகளும் உண்டபின் உலாவுதல் வேண்டும் என்பார்.உணவு உண்ண வாழை இலை:
உண்டதற்கு உண் கலங்கள் உடலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற விதிக்கு இணங்க பொன், வெள்ளி, வாழை இலை, தேக்கிலை, தாமரை இலை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.