book

உரையியல்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மாதையன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :254
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788177357394
Out of Stock
Add to Alert List

பெ.மாதையன் மார்க்சியக் கோட்பாடு நெறியில் ஆழங்கால்பட்டவர் . மக்கட் பண்புமிக்க ஆய்வாளர் , ஆழமான  சமூக அக்கறை பொதுளியவர் . மரபான  தமிழ்ச்சிந்தனையைப் புதுப்புதுக் கண்ணோட்டங்களைப் பயன்படுத்தித் தெற்றென விளங்கவைக்கும் வல்லமை வாய்ந்தவர். அவரது இந்த உரையியல்  நூல் தமிழிலக்கிய, இலக்கண உரைமரபைப் பண்டுமுதல் இன்றுவரை அலசும் அரிய ஆய்வு நூலாகும். மொழிக் குறியியல் , அகரநிரலியல், மொழிப் பொருண்மையியல், சொற்பொருளாய்வியல் , உரையியலின் பொதுநெறி, தனிநெறி, மூலபாடத் தேர்வியல் , உரைவழிக்கிளர்ந்தெழும் ஆய்வுமரபு ஆகிய கோட்பாட்டு அடுப்படையிலான அணுகுமுறைகளின் துணைகொண்டு தமிழ் உரைக்களத்தைப் பன்முகத் தளங்களில் பத்து ஆய்வுரைகள் வழியாக வளப்படுத்தியுள்ளார் ஆய்வாளர். முறைகளின் பயன்பாட்டில் மார்க்சீயச் சிந்தனை  ஒளி ஊடடியிழைவது பெருமகிழ்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த புத்துணர்பாட்டுத் திறனையும்  புரிதலையும் மலரச் செய்கிறது . அவ்வகையில் இந்நூல் தமிழ் உரைமரபின் கோட்பாட்டியலான பேரொளியாகத் திகழ்வதைக் காணலாம்.