book

கை சுஜாதா குறுநாவல் வரிசை 16

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381975077
Out of Stock
Add to Alert List

இன்று படித்தது கை. ஆம். சுஜாதாவின் ”கை” குறுநாவல்தான். வரிசை எண்.16. உயிர்மை வெளியீடு.இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும். அதைக் குறிப்பாக அவனே உணர்ந்து கொள்வதும், அதற்காகத் தன்னை அர்ப்பணிப்பதும்தான் எல்லோருக்கும் நிகழாத ஒன்றாகிப் போகிறது. இந்தக் கை-யின் சிவத்தம்பி தன் கையின் திறத்தை நன்கு உணர்ந்தவனாக இருக்கிறான். அதன் மேல் அப்படியொரு நம்பிக்கை அவனுக்கு. தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை. அத்தனை உற்சாகமான, மனச்சோர்வே இல்லாத ஒரு கதாபாத்திரம்.அவனுக்கான முயற்சிகளை விறுவிறுவென்று சொல்லிச் செல்லும் பாங்கில், ஐயோ, கடவுளே அவனுக்கு ஒரு வேலையைத்தான் கொடுத்துவிடேன் என்று நம் மனமும் வேண்டுகிறது. எந்தக் கையின் மீது அவன் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தானோ, அந்தக் கையினால் ஆன ஓவியத் திறமையே சம்பந்தமில்லாத ஒரு இடத்தில் வலிய அதைச் சம்பந்தப்படுத்தி வேலையைப் பெற்றுத்தர யத்தனிக்கிறது. முன் பணத்திற்காக ஓவியம் வரைந்து, வரைந்து, விற்றுத் தள்ளுகிறான். அஞ்சு, அஞ்சாகச் சேர்த்த துட்டை எடுத்துக் கொண்டு பறக்கையில்தான் விதி அவனை அடித்துப் போட்டு விடுகிறது. விபத்தில் சிக்கி கையை இழக்கிறான். அவனோடு சேர்ந்து நம் வாசகமனமும் சோர்கிறது