| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
”பாரத தேசத்தை, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு நாங்கள் உறுதி…” இவ்வாறு தான் இந்திய அரசியல் சாசனம் (Constitution of India) துவங்குகிறது. அதாவது இந்திய அரசானது எந்த மதத்தையும் சாராத, எந்த மதத்துக்கும் சார்பானதாக விளங்காது என்பது பொருள். மேற்கூறிய வாசகம் தீவிரமாய் கடைபிடிக்கப்படுமானால், (உண்மையானால்) எந்த அரசு அலுவலகங்களிலும் வாசலில் பிள்ளையார் உட்கார்ந்துகொண்டு வாயிற் காப்பாளன் வேலை செய்து கொண்டிருக்கக்கூடாது, எந்த அரசு அலுவலகங்களிலும் ஆயுதபூஜையும் வெள்ளிக்கிழமை பூஜையும் நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ரம்ஜானுக்கு இஃப்தார் நோன்பு திறக்க முதலமைச்சர் குல்லா போடக்கூடாது, கிறிஸ்துமஸுக்கும், புத்தஜெயந்திக்கும், பொங்கலுக்கும், தீபாவளிக்கும் குடியரசுத் தலைவர் முதல் முதலமைச்சர் அலுவலக பியூன் வரை வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், நடைமுறை, அரசியல் சாசனத்தின் இந்த வரிகளைப் பார்த்து பல்லிளிக்கிறது.
அரேபிய நாடுகளைப் போல, பாக்கிஸ்தானைப் போல, ஆஃப்கானிஸ்தானைப் போல. நேபாளத்தைப் போல நாங்கள் மதச்சார்பற்ற நாடு இல்லை என்று சொல்லிவிட்டு ஒபாமாவைப் போல நாடாளுமன்றத்தில் தீபாவளி கொண்டாடலாம். எந்த மதத்துக்கும் சார்பான அரசாக இல்லாமல் இருப்பது என்று பொருள் தரக்கூடிய வார்த்தையை மறைத்து எல்லா மதத்துக்கும் ஜால்ரா போடுவதுதான் மதச்சார்பற்ற அரசு என்று ஜல்லியடிக்கும் அரசியல்வாதிகளை ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோ (George Jacob Holyoake)[1] வின் பெயரால், தண்டிக்க வேண்டும். இப்படி பித்தலாட்டங்கள் எல்லாம் வேண்டாம், இது இந்துக்களின் தேசம், அதனால் இது இந்து தேசம், மதச்சார்பற்ற என்ற வார்த்தையை எல்லாம் தூக்கிப்போட்டுவிடலாம். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கலாம், அதாவது ”இந்து அரசியல் சாசனத்தை உருவாக்கலாம்” பொது சிவில் சட்டத்தைப்போல என்று சொல்லும் ஒரு கும்பலின், கட்சியின் தலைவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் ”அத்வானி” என்ற பெயரில்.
வாழ்க்கை வரலாறு எழுதுவதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று லிங்கன் வகை, மற்றொன்று புஷ் வகை. அதாவது, லிங்கனைப் பற்றி எழுதும் போது, சில பக்கங்கள் அவருடைய கருப்பு பக்கத்தை விளக்குவதாக இருக்கும், (ஹேபியஸ் கார்ப்பஸைத் தூக்கியது, உள்நாட்டுப் போர்) மற்ற பக்கங்கள் அவர் புகழ் பாடும். இன்னொரு வகை கலாய்ப்பதைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தெரியாது என்று தீர்க்கமாக முடிவு செய்து கொண்டு எழுதுவது, புஷ் வாழ்க்கை வரலாற்றைப் போல. (குறைந்தது எட்டாண்டு கால ஆட்சியாவது) இந்த புத்தகம் புஷ் வகையறா. அத்வானியின் இந்துத்துவத்தின் மீதும், அத்வானியின் மீதும் போகிற போக்கில் சாட்டையடியை விளாசிக் கொண்டு செல்கிறது, முதல் அத்தியாயத்திலிருந்து கடைசி வரி வரை.(அந்த இரு அத்தியாயங்களத் தவிர்த்து, இது பற்றி பின்னால்.)
நூலாசிரியரின் குறும்பைக் கொஞ்சம் கூறவே வேண்டும்:
அத்வானியின் வேண்டுகோளுக்குப் பிறகு முன்பைக் காட்டிலும் அதிக கரசேவகர்கள் ஆயுதங்களுடன் வேகவேகமாக நகரத்தொடங்கினர்…. ஒருவேளை தலைவரின் குரலை தங்களுக்குக் கிடைத்த சமிக்ஞையாக எடுத்துக் கொண்டார்களா? இருக்கலாம்…..
ரத்தப் பிரிவுக்கு அவரவர் விருப்பப்படி பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால் போதும். அத்வானி துளியும் யோசிக்காமல் தன்னுடைய ரத்தப் பிரிவு ஆர்.எஸ்.எஸ் பாசிட்டிவ் என்று பகிரங்கமாக சொல்லிவிடுவார்
முழுக்க முழுக்க முற்படுத்தப் பட்டவர்களின் முன்னேற்றத்தில் அதிக கரிசனம் கொண்டவர் அத்வானி. பா.ஜ.கவும் தான்
ராமருக்கு ஆலயம் என்பது அத்வானியின் உயிர்மூச்சு. இப்போது ராமர் பாலமும் சேர்ந்து கொண்டது.
தேர்தல் அறிக்கை தயரானது. அதே பழைய பல்லவிகள். கொஞ்சம் புதிய ராகத்தில். ராமர் ஆலயத்தை வைத்துமட்டும் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்த பாஜக இந்தமுறை ராமர் பாலத்தையும் சேர்ந்த்து கொண்டுள்ளது.
நல்ல வேளையாக தமிழகத்தில் பாஜக வலுவாக இல்லை, இருந்திருந்தால்…
ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை கூறும் போது, அவருடைய சமகால சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது. ஆனால், அந்த சம்பவங்களோடு அந்த தலைவருக்கு உள்ள தொடர்பை கூறுவதாக அது இருக்க வேண்டும். ஆனால் இந்த புத்தகத்தைப் பொறுத்தவரை, இரண்டு அத்தியாயங்கள் எமர்ஜென்ஸிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அத்வானியைப் பற்றிய சம்பவங்கள் மருந்துக்கும் இல்லை. இதற்கு முந்தைய அத்தியாயத்தில் அத்வானியின் கைதில் நடந்த சட்டமுறைகேடுகளைச் சுட்டிக் காட்டியதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் கூறப்பட்டுள்ளது. இது போல எமர்ஜென்ஸியில் அத்வானி சம்பந்தபட்ட செய்திகளை மேலும் கூட்டி, எமர்ஜென்ஸியின் நடைமுறைகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். எமர்ஜென்சியில் அத்வானி சிறையில் இருந்த போது அவருக்கு சமையல் செய்துபோட்ட சமையல்காரரைப் பற்றியும் சமையலைப் பற்றியும் இன்னும் எழுதியிருக்கலாம். பாரா வை விட்டிருந்தால் கொத்து பரோட்டா போட்டிருப்பார்.
அதேபோல அத்வானியின் சமகால வரலாற்றினூடாக அவர் வாழ்க்கைக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய சொந்த வாழ்க்கை, குடும்பம், குட்டிகள் பற்றி ஒன்றும் இல்லை. அவருடைய அரசியல் வாழ்க்கையின் சில சம்பவங்கள் (அவரை புரட்டிப் போட்ட சம்பவங்கள் உட்பட) சில பக்கங்களில் சுருங்கியிருப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம். ஜின்னாவின் ஆவி வந்து அத்வானியை ஆட்டிய கதை சில வரிகள் முடிந்துவிட்டது. கந்தஹார் கடத்தல் அவரை ஆட்டிவிட்டது ஓட்டிவிட்டது என்று சொல்லியிருக்கிறாரே தவிர எப்படி ஆட்டிவைத்தது என்று சொல்ல அவருடைய மனஉறுதியையும் கடுமையையும் சொல்லி இருக்கலாம். கடைசி நேர அவசரம் உறுத்தலாய் துருத்திக் கொண்டு தெரிகிறது. இப்படிச் சில குறைகள் இருந்தாலும் அத்வானியை கலாய்ப்பவர்களுக்கு ஏற்ற புத்தகம். அய்! எங்க தலீவர் பத்தின புஸ்தகம் என்று யாராவது பார்த்தால், சாரி இது உங்களுக்கான புத்தகம் இல்லை.
[1] ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோ – secularism என்ற வார்த்தையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்
நன்றி : http://thamiziniyan.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/