
புத்ர
₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லா.ச.ராமாமிருதம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச்
செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த
அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல்
ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். யதார்த்த
நடையும் கவித்துவமும் சிருஷ்டித்த குழந்தை ‘புத்ர’ எனலாம். நூறு
ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். ‘புத்ர’ ஒரு வகையில் அவரது
முன்னோர்களின் சரித்திரம் எனலாம். கதை சொல்வது மட்டும் அவரது லட்சியமல்ல.
மனித மனத்தின் கோபங்களை, தாபங்களை, சஞ்சலங்களை இடையறாது தொடரும்
இயக்கத்தின் பிம்பம் என நிறுவ முயல்கிறார். வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக்
கடந்துவிட்ட ‘புத்ர’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
