book

சிரிப்பும் கண்ணீரும்

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமரர் கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

இந்தக் கதைகளில் காணப்படும் பவுன் பதினாலு ரூபாய், ஒரு ரூபாய்க்கிருந்த மதிப்பு போன்று, 1930களில் நிலவிய காலச் சூழலைப் பற்றிப் படிப்பது சுகமான அனுபவமாயிருக்கும். அதேபோல் விதவை மறுமணம், கள்ளுக்கடை எதிர்ப்பு, காங்கிரஸ் இயக்கம், உலகப் போர்ச் சூழல்- எல்லாவற்றையும் படிக்கிறபோது எழுபதாண்டுகள் பின்னோக்கிப் பயணம் செய்து அந்த நாட்களை அனுபவித்து மகிழ்கிறோம். அமரர் கல்கியின் கதைகளில் என்னதான் கதை யம்சமும், நகைச்சுவையும் இழையோடினாலும், ஆங்காங்கே தேசத்தையும், சமுதாயத்தையும் பற்றிய சிந்தனைகளும் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அதுதான் கல்கி என்கிற யுகபுருஷரின் தனித்தன்மை.