book

இராமாயண சாரம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. பழனியப்பன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

பழ.பழநியப்பன் கம்பன் கழகம் முதலில் கால் பதித்த காரைக்குடியோன்; அந்தத் தாய்க்கழகத்தின் தற்போதைய செயலாளன். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் கம்பன் சேவையைச் சென்னிதனிற் பதித்தோன். கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களால் ஆட்கொள்ளப் பெற்று, கம்பன் அடிசூடிய செந்தமிழ்ச்சேவகன். குருநாதன் வழியில் கம்பன் விழாவைக் கொண்டாடி மகிழ்வதோடு இளந்தலை முறைப் பேச்சாளர்களையும் இனங்கண்டு எடுத்து, வளர்த்து, நாளைய அறிஞர்களை உருவாக்கிய தமிழார்வலன். கம்பன் / கைங்கரியத்தோடு மட்டும் நின்று விடாமல் அவனைக் கற்று களிகொண்டு, அதனைக் கருவாக்கி, 'கம்பன் விசுவரூபம்", "கம்பனிடம் கற்போம்", "கம்பராமயணச் சுருக்கம்" என்ற புத்தகங்களில் பொதித்துத் தந்தோன் ''கட்டுரைக்களஞ்சியம்”,' 'அருள் மாலை", "ராம்-89”, ''தமிழ்த்தாய் பிரபந்தம்" என்ற தொகுதிகளைத் தொகுத்தளித்தோன்.