மனசே மகிழ்ச்சி பெறு
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேனி எஸ். மாரியப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184465693
Add to Cart
விமான நிலையத்தில் அங்க பரிசோதனை அதிகாரிகள் ரஸ்ஸலிடம் உங்களிடம்
அதிகம் விலை மதிப்புள்ள பொருட்கள் என்னென்ன
வைத்திருக்கிறீர்கள்காட்டுங்கள் என்று அதட்டும் தொனியில் கேட்டனர்.அதற்கு,
ரஸ்ஸல் சிறிதும் கோபப்படாமல், 'என்னிடம் இருக்கும் அதிக விலை மதிப்புள்ள
ஒரே பொருள் எனது அறிவுதான். அதை நீங்கள் பறிமுதல் செய்ய முடியாது' என்று
புன்னகையுடன் பதிலளித்தார்.எந்த ஒரு மனிதனைப் பார்த்தாலும் அவசர கதியில்
ஓடிக் கொண்டிருக்கிறான். நிறுத்தி என்னவென்று கேட்டால் எனக்கு நிம்மதி
இல்லை என்கிறான். இதற்குக் காரணம் ஒரு சின்ன விஷயத்தைக்கூட, கடுமையாக
எடுத்துக் கொள்கிறான். அப்படிக் கடுமையாக எடுத்துக் கொள்வதால் விரைவில்
கோபமடைந்து 'டென்ஷன்' ஆகிவிடுகிறான். அதனால், தன்னிலை மறந்து
தற்கொலைக்குக்கூட, துணிந்து விடுகிறான்,மன அமைதியும், நிம்மதியும் அடைய
வேண்டுமானால், அவன் 'நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருக்க வேண்டும். அதை
உணர்ந்து, அறிஞர்கள் தங்கள் அனுபவத்தில் சொன்ன சாதுர்யப் பேச்சுக்களை
எல்லாம் தொகுத்து ''மனசே... மகிழ்ச்சி பெறு அறிஞர்களின் சமயோசிதப்
பேச்சுக்கள் என்ற தலைப்பில் இந்த நூலை உருவாக்கினேன்.