book

பிணந்தின்னிக் கழுகு கொலம்பஸ் முதல் ஒபாமா வரை

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மோகன ரூபன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :284
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788177356915
Add to Cart

இந்தியாவில் பார்சி இன மக்கள் இப்போது வரை யாராவது இறந்துவிட்டால் அவர்களை மலையின் உச்சியில் கொண்டு  சென்று வைத்து விடுவார்கள். அதற்காக பிரத்யேகமாக “டவர் ஆப் சைலன்ஸ்” என்கிற பெயரில் பெரிய கிணறு போன்ற பகுதியை அமைத்திருக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு இறந்த உடலிலிருந்து உடைகள் அப்புறப்படுத்தப்பட்டு  பிணந்திண்ணி கழுகுகளுக்கு இரையாக அப்படியே விட்டு விடுகிறார்கள். கழுகுகள் கூட்டமாக வந்து உடல்களைத் தின்று விட்டுச் செல்கின்றன. பல ஆண்டுகளாக பார்சி இன மக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள். இப்போது பார்சி இனமக்கள்  ஓரளவிற்கு நாகரிக வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டாலும் அவ்வப்போது சில இறுதிச் சடங்குகள் இப்படித்தான் நடக்கின்றன.

கழுகுகளின் எண்ணிக்கை குறைவுக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது டைகுளோஃபினாக் என்கிற வலிநிவாரணி மருந்து. வீட்டில் வளர்க்கிற கால்நடைகளான ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குகளுக்கு வலி நிவாரணியாக டைகுளோஃபினாக் மருத்துவரால் கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்கப்படுகின்ற மருந்துகள் மாட்டின் உடலில் எச்சமாகத் தேங்கி விடுகின்றன. சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போகிற மாடுகளை வனப்பகுதியில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அப்படி இறந்து போகிற உடலில் டைகுளோஃபினாக் வலி நிவாரணி மருந்து தேங்கியே இருக்கும். மருந்து இருக்கிற உடலைக் கழுகுகள் உண்பதால் அவற்றின் சிறுநீரகங்கள் செயல் இழந்து இறந்து விடுகின்றன. இப்படித்தான் தமிழக வனப்பகுதிகளில் வசித்த  செந்தலைப் பாறு (Red headed Vulture), மஞ்சள் திருடிக் கழுகு (Egyptian Vulture), வெண்முதுகுப் பாறு (White-backed Vulture), நீண்ட அலகுப் பாறு (Long billed Vulture ) ஆகிய கழுகுகளின் இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போயின. பிணந்தின்னிக் கழுகுகள் இப்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கிறது. பல இடங்களில் சாதாரணமாக தென்பட்ட  பிணந்தின்னிக் கழுகுகள்  இப்போது அதிகம் தென்படுவதில்லை.