
சங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வீ. ரேணுகாதேவி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423654
Out of StockAdd to Alert List
நூலாசிரியர் வீ.ரேணுகாதேவி மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். முதுகலை நிலையில் 27 ஆண்டுகளாகக் கற்பித்து வரும் இவர் 32 ஆண்டுகள் ஆய்வுப் பணியில் அனுபவம் பெற்றவர். மரபாய்வுத் துறை, மொழி, தொடர்பியல், சிறுபான்மை மொழிகள், இலக்கணம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட பேரா.வீ. ரேணுகாதேவி திராவிட மொழியியல் கழகம், தமிழ் மொழியியல் கழகம், ஜெர்மனியில் உள்ள மொழியியல் மரபாய்வுத் துறை போன்ற அமைப்புகளில் உறுப்பினராவார். இவர் 3 ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துள்ளதுடன், 7 நூல்களை வெளியிட்டுள்ளார்; 4 நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இவரது 80 ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு தேசிய, சர்வதேசிய இதழ்களில் வெளிவந்னுள்ளன. கருத்தரங்குகள் / மாநாடுகளில் 160 ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். மேலும் 35 பயிற்சித் திட்டங்களிலும், பட்டறைகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். பல கல்விக் குழுக்களிலும் அறிதொழில் அமைப்புகளிலும் உறுப்பினரான ரேணுகாதேவி 2007-இல் இந்தியாவில் சிறந்த குடிமகனுக்குரிய விருதினைப் பெற்றார்; திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் மொழியியல் சிறுபான்மைகளுக்கான வெங்கடராமையா விருது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2010-இல் உயர்நிலைக் கல்வியில் கையாண்ட புதுமை நடைமுறைகளுக்காக, சிறந்த ஆசிரியர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
