அடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்) கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்றார் திருவள்ளுவர். அப்படி கசடறக் கற்க வேண்டியவை அவர் நமக்குத் தந்துள்ள குறட்பாக்கள். வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை. நமக்கு நாம் உண்மையாக, நம்மை நாமும் மற்றவர்களும் மதிக்கும் படியாக வாழ்வது எப்படி என்பதை எளிய முறையில் கற்றுத்தந்த திருவள்ளுவர் என்றும் நம் நன்றிக்குரியவர்; நம்பிக்கைக்குரியவர். அவருடைய குறள்கள் சிலவற்றில் பொதிந்துள்ள செறிவான அர்த்தங்களை, வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளை சுவாரசிய மான சின்னக் கதைகளாகத் தரும் நோக்கில் இந்த நூல் 'அடக்கம் உடைமை' என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 10 குறட் பாக்களின் அர்த்தங்களையும் கதை வடிவில் எடுத்துரைக்கிறது.