சிங்காரவேலர் மார்க்சியத்தை நமது மண்ணுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று விரும்பியவர். இந்திய மக்களுடைய பண்பாட்டுப் பாரம்பரிய பின்னணியில், இந்திய மக்களின் மனோபாவர், மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைகள், அவற்றிக்கு உட்பட்டு இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஜாதி என்று சொன்னாலும், மதம் என்று சொன்னாலும் ,மூடப்பழக்க வழக்கங்கள் என்று சொன்னாலும் அதற்கு மார்க்சியத்திலிருந்து தீர்வுபெற முயற்சிக்க வேண்டும். அந்த அளவில் மார்க்சியத்தை இந்தியாவிற்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று எண்ணியவர் சிங்காரவேலர்.