முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான,நாசகரமான சக்திகளின் தயவில் உள்ள மக்களுடைய உள்ளங்களிலிருந்து மதத்தை வெறும் கல்வி புகட்டும் புத்தகங்களின் மூலமாக மட்டும் நீக்கிவிட முடியாது. மக்களே எழுச்சியுற்று மதத்தின் மூல வேர்களை எதிர்த்துப் போராடக் கற்றுக் கொள்ளும்போதுதான்,ஒன்றுபட்ட அமைப்புரீதியான திட்டமிட்ட உணர்வுபூர்வமான வழியில் முதலாளித்துவ ஆட்சியின் சகல வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக்கொள்ளும் பொழுதுதான் மக்களுடைய உள்ளங்களிலிருந்து மதத்தை துடைத்தெறிய முடியும். விரிவாகக் கூறுகிறார் லெனின்.