முதலாளி ஒரு தொழிலாளியைத் தினமும் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வைக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.தனக்குக் கொடுக்கப்படும் கூலியை அல்லது தனது உழைக்கும் சக்தியின் மதிப்பை ஈடு செய்வதற்குத் தேவையான ஆறு மணி நேரத்தைத் தவிர அதிகமாக மேலும் ஆறு மணி நேரம் அவன் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதனை நான் உபரி உழைப்பு மணி நேரம் என்ற அழைக்கிறேன்; இந்த உபரி உழைப்பு உபரி மதிப்பாக, உபரி உற்பத்திப் பொருளாகப் பரிணமிக்கிறது. கூறுகிறார் ஆசிரியர் கார்ல் மார்க்ஸ்.