கவிஞனின் இதயமும் அநீதிக்கெதிரான மூர்க்கமும் கொண்ட மாபெரும் போராளி சே.குவேராவின்வாழ்க்கை இங்கே உணர்வெழுச்சியுடைய ஒரு நாடகமாகச் சாத்தியதாகிருக்கிறது. சே வின்வாழ்க்கைச் செறிவின் பிரதான அம்சங்களை ஒன்றிணைத்து மூர் செதுக்கி வடிக்கப்பட்ட இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் தர்மத்தின் ஆவேசம் கொந்தளித்துக் கிடக்கிறது. நம் மனம் மேவும்தழல் இது. மக்கள் நேசமுடைய அனைவருக்குமான நம்பிக்கையின் முகத்துவாரம். வலி தரும்படி நம் சிந்தனையைத் துறைத்து அப்போராளியின் வாழ்க்கைச் சாரத்தைப் புகட்டுகிறதுஇந்த நாடகம். அவருடைய எக்காலத்திற்குமான இருப்பை உரத்து முழக்குகிறது. சே.பாடுகளின்இருட்கானகத்தில் சுமந்த கடமையின் கனலால் தானேயெரிந்து கொடுத்த வெளிச்சத்தின் கலைவடிவமென்றாகிறது. போர் நிலங்களில் சிந்திய ரத்தம் தெரித்து, குண்டுப்புகை படிந்துலட்சியத்தின் பொருட்டு அனாயாசமாக மடிந்த வீர வாழ்க்கைகள் உறுத்தி, பொதுவுடைமைச்சிந்தனையின் கம்பீரக் கொடியசைவின் ஒளிக்கூச்சம் பட்டு, நம் கண்களில் ஈரம் சேரும்.துயருற்றோரைத் தழுவும் விருப்பத்தால் நெஞ்சு விம்மும்.
-பதிப்பகத்தார்.