”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம் கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான் திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறையாக உள்ளது.
இந்தப் படிப்பினைக் கதையை 40 வருடங்களுக்கு முன் தோழர் தா.பாண்டியன் அவர்கள் மெருகு நடையில் தமிழில் தந்துள்ளார். லியோ டால்ஸ்டாயின் நினைவு நாள் வெளியீடாக டிசம்பர்5, 1971-ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.