போராட்டம் நாற்காலியில் உட்கார்ந்து பழக்கம் இல்லை என்று தரையில் உட்காரும் ஒரு பெண் தீயசக்தியைத் தீர்த்துக்கட்டத் துப்பாக்கி ஏந்தும் புரட்சிப்பெண்ணாக மாறுகிறாள். கதையின் போக்கு குடும்பச்சூழலில் அமைந்தாலும் சதி, சூழ்ச்சி நம்பிக்கைத்துரோகம், மறைமுக மர்மச் சம்பவங்கள் ஆகிய அம்சங்களுடன் விறுவிறுப்பாக படிக்கத் தூண்டும் வகையில்
சிறப்புப்பெற்றுள்ளது. இந்நாவல் காதலின் பெருமை பெண்ணின் பெருமை, சோதனைகளையும் வேதனைகளையும் வென்று சாதனை படைக்கும் மனநிலை ஆகியவற்றைக் கற்பிக்கிறது. சமூதாயம் சரியாக இருந்தால் மனித மனநிலை தடுமாறாமல் சமநிலையாக இருக்கும். கொலை, தற்கொலை, பாலியல் சிதைவுகள் நிகழாமல் இருக்க சமூதாயத்தின் ஒவ்வொரு
அங்கமும் நல்லுணர்வுகளைத் தாங்கியிருக்க வேண்டும். சமூதாயம் நல்லுணர்வுபெற இதுபோன்ற நாவல்கள் தேவை.
- பதிப்பகத்தார்.