வரலட்சுமி விரதத்தை முறையாக கடைபிடித்து பூஜை செய்பவர்களின் இல்லங்களைத்
தேடி அன்னை மகாலட்சுமி வருகிறாள். அன்னை மகாலட்சுமி காலடி எடுத்து
வைக்கும் வீட்டில் செல்வ வளம் பெருகும். வரும் வெள்ளிக்கிழமை நாடு
முழுவதும் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.ஆண்டு தோறும் ஆவணி
மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி
பூஜையானது வரும். சில தருணங்களில், ஆடி மாதத்தில் அமையும். ஆகஸ்ட் 9ஆம்
தேதியன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்
லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும் ஏற்ற நாள்.வரலட்சுமி
நோன்பை முன்னிட்டு முழுவதும் சுமங்கலி பெண்கள் விரதமிருந்து குங்குமம், பூ
உள்ளிட்டவற்றை பெண்களுக்கு கொடுத்து வணங்கி வழிபாடு நடத்துவார்கள்.
அன்றைய தினம் பங்காளிகள் ஒன்றுகூடி முன்னோர்களுக்கு வழிபாடும், குலதெய்வ பூஜையும் செய்ய உகந்த நாளாகும்.