வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும், எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் நூல் இது.
நியாயமான கனவுகள் படைப்புச் சக்தி உடையவை, மனதில் ஏற்படும் ஒவ்வொரு எண்ணத்திலிருந்தும் உடலின் ஒவ்வொரு ""செல்லும் லாபமடைகிறது அல்லது துன்பமடைகிறது. நாம் யோசிப்பதும், நேசிப்பதுமே நம்மைக் கட்டமைக்கிறது என்பன போன்ற கருத்துகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
கனவு காணும் சக்தி என்பது நமக்கு விளையாட்டாகக் கொடுக்கப்படவில்லை. பல உண்மைகளைப் பொதிந்து வைத்துள்ள தெய்வீகப் பரிசு அது என்பது போன்ற ஆக்கப்பூர்வமான பல கருத்துகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன."