பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை