டோரிஸ் லெஸ்சிங், தென்னாப்பிரிக்காவில் வசித்த காலத்தில் கறுப்பர்கள் ஒடுக்கப்பட்டதைத் தன் எழுத்துக்களில் வடித்தவர். குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் இருப்பதை வலியாக, சுதந்திரமின்மையாக உணர்ந்தவர். 2007ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் புறநகர்ப் பகுதியில் வசித்து வரும் டோரிஸ் லெஸ்சிங், 89 வயதானவர்.