எதிர்ப்படும் மனிதர்களையும் கடந்து செல்லும் நிகழ்வுகளையும் தனது நடையில், தனது மொழியில் அங்கதம் மேலிட ஆழ வேரூன்றச் செய்யும் அற்புத விளையாட்டாய் திகைக்கச் செய்கின்றன இவரது சிறுகதைகள். ஒவ்வொரு வரியிலும் ஒரு ஒளி ஒலி நாடகம் இயங்குகிறது. மனித மனங்களின் சூதும் வாதும் குணமும் கோபமும் உருக்கி ஊற்றப்பட்ட கதைப் பரப்பை நம்முன் விசித்திரமாக வெளிப்படுத்துகிற மாயக்காரன் எழில்வரதன்.