தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களில் பொதிந்துள்ள மார்க்சிய சிந்தனைகள் குறித்துத் தமிழ்ப்பேரறிஞர்களின் ஆய்வுகள் இந்நூலில் கோவை வாணன் அவர்களால்தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
இந்திய இலக்கிய வரலாற்றில் எந்த மொழியிலும் இல்லாத திணைக்கோட்பாட்டை உலகளாவிய உற்பத்தி முறைகளுள் ஒன்றுடன் ஒன்று பொருத்திக்காட்டிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று சான்று காட்டி நிறுவியுள்ளார். சங்காலச் சிந்தனைகளிலும் சிலப்பதிகாரச் சிந்தனைகளிலும் மார்க்சியம் வெளிப்படும் இடங்களைச்சிறப்பாக்கப் பொருத்திக்காட்டியுள்ளார்.