"நேற்று மாலை ஸவுதான்டன் துறைமுகம் வந்து சேர்ந்த 'விக்டோரியாய என்னும் கப்பலில் இந்தியா தஏசத்து மஆம்பழங்கள் வந்து இறங்கின".
மேற்படி சஎய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில் சின்ன எழுத்துத் தலைப்புடன் மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகப்போகின்றன என்பது மட்டும் தெரிந்திருந்தால் உப பத்திரிகையாசிரியர்கள் அச்செய்தியை அவ்வளவு அலட்சியம் செய்திருக்கமாட்டார்கள். அந்தப் பின் விளைவுகள் என்னவென்பதைக் கேளுங்கள்!!