கொங்கு நாட்டுப்புறக் கதைகள்' என்ற நூலில் இருபத்தெட்டுக் கதைகள் உள்ளன. இக்கதைகள்ள் அனைத்தும் இந்நூலாசிரியர் திரு.க. கிருட்டினசாமி கோவை மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கும் சென்று அங்குள்ளவர்கள் சொல்லக் கேட்டு எழுதியவை. கதையைச் சொன்னவர் பெயரும் ஊரின் பெயரும் ஒவ்வொரு கதையின் இறுதியில் அவர் தந்திருக்கிறார். இக்கதைகள் பெரும்பாலானவற்றில் நீதி அல்லது வாழ்வியல் உண்மை அமைந்திருத்தலை உணரலாம்.