இந்நூலில் இடம் பெறும் 'இருளினுள்ளே' என்ற குறுநாவல் தாய்மையின் தனிச் சிறப்பையும் தந்தையின் கட்டுப்பாட்டு உணர்வையும் மையமாக வைத்து சித்தரிக்கப்பட்ட சிறந்த படைப்பு. கெட்டவர்களோடு நல்லவர்கள் சேரக்கூடாது என்ற நியதியை மாறறி கெட்டவர்களோடு நல்லவர்கள் சேர்ந்து அவர்களைத் திருத்தி மனித சமுதாயத்தை மேன்மை பெறச் செய்ய வேண்டும் என்ற புரட்சிக் கொள்கையை வலியுறுத்தும் கதை.
மனித இனத்தின் மூலகர்த்தக்களாக விளங்கும் தொழிலாளி-விவசாயி வர்க்கத்தின் ஆக்கசக்தி பற்றி 'நெஞ்சலிட்ட நெருப்பு' என்ற குறுநாவலில் ஆணித்தரமான கருத்துக்களை நூலாசிரியர் விவரிக்கிறார்.
தொழிலாளிகளின் முதுகெலும்புகளை முறிந்து சொகுசு நாற்காலிகள் அமைக்கும் ஆக்க சக்தி முதலைகள் எப்படி வேடதாரிகளைச் செயல்படுகிறார்கள் என்பதை 'நெஸ்ப்றே' என்ற குறுநாவலில் பொதுவுடமைவாதியான அகஸ்தியர் குத்திக் காட்டுகிறார்.