"கடவுள் இருக்கார்னு நானு முழுசுமா நம்புறேன். ஆனா அந்தக் கடவுள் உங்க செயலுக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட கடவுள். அந்தக் கடவுள, ஏழைகளுக்குச் சார்பா இருக்கும் அந்தக் கடவுளைத் தேடி நான் போறேன். இந்த நிறுவனமாக்கப்பட்ட மத்தத தூக்கி எறிஞ்சுட்டு, குருத்துவத்தத் துறந்துட்டுப் பேறேன். நீங்க தூக்கிப் பிடிக்கும் கடவுள் கடவுளே இல்லை. நிறுவனமாக்கப்பட்ட மத்ததுல கடவுள் இல்லவே இல்லனு அறிவிக்கப் போறேன். அப்படி அறிவிக்கிறதிலதான் கடவுள் இருக்கார்னு நானு உணர்றேன். என்னைக்கு ஒருத்தன், நீங்க தூக்கிப் பிடிக்கும் கடவுள இல்லன்னு மறுத்துட்டு ஏழைகளுக்குச் சார்பா நெலப்பாடு எடுக்கானோ அன்னைக்குத்தான் அவன் கடவுள ஏத்துக்கிடலைனு சொல்வேன். இன்னைக்கு நீங்க கூட கடவுள ஏத்துக்கிடல. பணத்தையும், பதவியும், அதிகாரத்தையும், சாதி வெறியையும் தான் கடவுளா வச்சிருக்கீங்க. உங்கள கடவுள நீங்களே வச்சுக்கோங்க. நான் போறேன்".