துறவு வாழ்வுல நான் ஒரு குருவா இருக்க முடியாது ஒரு தாழ்ந்த சாதிக் குருவாகத்தான் இருக்க முடியும் என்ற உண்மை புலப்பட்டுச்சி அங்கே ஒரு தாழ்ந்த சாதிக்காரனா இருக்கிறதுக்கும் வெளியே ஒரு தாழ்ந்த சாதிக்காரனா இருக்கிறதுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியல. அங்கே இருக்கிறதைவிட வெளியே இருக்கிறதுதான் உயர்ந்தது என்று மனசுக்குப் பட்டுச்சி. நான் ஆன்ம குருட்ட, 'சாமி. சாதிப்பாகுபாடுங்கிற சிலுவை நீங்க கொடுக்கிற சிலுவை. நம் கடவுள் இயேசு கொடுக்கிற சிலுவை இல்ல. நீங்க கிறிஸ்துவைப் பின்பற்றுகிற சாமியார்க இல்ல. சாதியைப் பின்பற்றுகிற சாமியார்க. நான் இங்கே இருந்தா அது இயேசுவுக்கே பிடிக்காது'ன்னு சொல்லி துறவு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வச்சிட்டு வந்துட்டேன்,"
"நம்ம கடவுளுநாள் இங்க அழைச்சிக்கிட்டு வந்தாரு. இப்ப அந்தக் கடவுள் நம்மள அவகு நிலத்தில் இறங்கி அறுக்கச் சொல்றாகு அவருக்காகக் கஷ்டப்படும் நம்மாக் கைவிடமாட்டார். துணிஞ்சி இறங்குங்கட அறுவடை செய்யுங்க.. நாம் நட்ட நாற்று அது... அதனால் துணிஞ்சி அறுங்க இது கடவுள் நிலம். அந்தக் கடவுளு நம்ம பக்கம் இருக்காரு--- நிலத்தையும் நமக்கு கொடுத்திட்டாரு. யாரு தடுத்தாலும். கேட்காதிங்க. போலீஸ் அடிச்சாலும் ஓடாதீங்க. தொடர்ந்து அறுங்க.. இங்கயே செத்து விழுந்தாலும் பரவாயில்ல கடவுளு கொள்கையை மறுதலிச்சிட்டு உயர்ந்த சாதிக்காரங்க காலுல விழுகிறதவிட இங்கயே செத்து விழுவோம்."
"சுவாமியாரால் தாளே செல்வம் இறக்க நேரிட்டது. அன்று ஊரிக் கூட்டத்தில் செல்வம் செய்தது சரி என்று துணிந்து அவர் சொல்லி யிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்குமா? அல்லது சேரி ஆட்களுடன் அவர் இருந்திருந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகியிருக்குமா? பட்டினியாகக் கிடந்த இவர்களை அவர் கோயில் நிலத்தில் அறுவடை செய்ய அனுமதித்திருந்தால் இந்நிகழ்ச்சி நடந்திருக்குமா?"