இந்நூல் இரா. காமராசு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வு ஆகும். திருந்திய வடிவில் நூலாக்கம் பெற்றுள்ளது. இன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் பல காலம் செயல்பட்டு வரும் இரா. காமராசு இன்று மாநிலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகின்றார். உழைக்கும் மக்கள் போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளுபவர். இவர் நா. வானமாமலையின் ஆராய்ச்சித்தடத்தை வரைந்து காட்டுவதன் ஊடாகத் தமிழியலுக்குப் பல்துறை சங்கம ஆய்வு முறையியலின் தேவையை எடுத்துக் காட்டுகிறார். தமிழியல் மாணவன் தன்னைச் செதுக்கிக்கொள்வதற்கும் இந்நூல் உதவும்.