கவிதையின் உறுப்பமைவான யாப்பு என்பது இறுதி நிலையில் சமூக வளர்ச்சியின் ' கதி' யுடனும் ஒட்ட ' த்துடனும் தொடர்புடையதே. ஒவ்வொரு சமூக மாற்றம் ஏற்படுகின்ற பொழுதும் அச்சமூகத்தின் ஓசையமைதியில். அதன் கவிதை யாப்பில் மாற்றம் ஏற்படவே செய்கின்றது. '' என்று வலியுறுத்துகிறார் கா.சிவத்தம்பி. தமிழ் பா' வரலாற்றை மேற்கூறிய எடுகோளின் அடிப்படையில் எடுத்துரைக்கும் பாத்திரமான ஆய்வுரைகள் தமிழியலுக்கு அத்தியாவசியமானவை. சங்க இலக்கிய யாப்பியல் என்னும் அ.பிச்சையின் இந்நூல் சிவத்தம்பி கூறிய எடுகோளை ஒருவகையில் அடிப்படையாக்க கொண்டு சங்க பா வரலாற்றை எடுத்து விளக்குகின்றது.