இந்திரா காந்தியைக் கொலைசெய்தவர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் மட்டும்தான் இதில் ஈடுபட்டிருந்தார்களா? இந்தப் படுகொலையின் பின்னணியில் வேறு சில பெரிய சக்திகளும் இருக்கக்கூடும் என்கிறார் தாரிக் அலி. இந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும் அமெரிக்க அரசுக்கு அடிபணியாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய இறையாண்மையைப் பாதுகாத்தவர். சீக்கியர்களுக்கு இருந்த உண்மையான ஆதங்கத்தை வேறு சில சக்திகள் பயன்படுத்திக் கொண்டன என்கிறது இந்த டி.வி. ஸ்கிரிப்ட்.