பெண்களுக்கு சமையல் என்பது மிகவும் முக்கியமான கலை, பெண்கள் எவ்வளவு நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்தாலும், சமையல் கலை பெண்களுக்கு முக்கியமான ஆபரணம். ஒரு சில பெண்கள் சமையல் தெரியவில்லை என்று பெருமையாக கூறுவார்கள். ஆனால் அப்படி சொல்வது தவறு. பெண்களாகிய நாம் அனைவரும் சமையலைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். கணவன் தன் மனைவிக்கு நேர் வேறொரு பெண்மிண நன்றாக சமைக்கிறாள் என்று கூறும் பொழுது அந்த மனைவிக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். இதையே காரணம்காட்டி ஒரு சில வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாம் நல்ல படியாய் கொஞ்சம் யோசித்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதிலிருந்து தடுக்கலாம்.