நல்லது கெட்டது நாலும் தெரிந்து வைத்திருப்பவர்கள் தாத்தா - பாட்டிமார்கள். அவர்கள் சேகரித்து வைத்திருந்த எழுத்து வடிவில் வராத, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு மருத்துவக் குறிப்புகளைத் தொகுத்து நாட்டு வைத்தியர் தாண்டவராயன் பிள்ளை நமக்குத் தந்துள்ளார். அத்துணை மருந்துகளும் எளிதில் கிடைக்கக் கூடியவை அதிகச் செலவில்லாத சிக்கனமான மருத்துவக் குறிப்புகள் எதிர் விளைவுகள் இல்லாதவை.