இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.
காதலாலும் வீரத்தாலும் தீர்மானிக்கப்பட்ட ஒரு கலாசாரம் மீசை முறுக்கி மெல்லச் சிரிக்கிறது.