தொண்டை நாட்டுத் தேவாரத் தலங்கள் எனும் நூல் சிவ.S. சபாரத்தின குருக்கள், திருவாலங்காடு அவர்கள் எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நூலைப் பார்த்தபொழுது மேலும் மகிழ்ச்சியுற்றேன். காரணம், தொண்டை நாட்டு சிவத் தலங்களைப் பற்றிய முழுமையான தொகுப்பாக உள்ளது இந்நூல்.
தொண்டை நாட்டுத் தலங்களின் அனைத்துப் பதிகங்களும் உரையுடன் அளிக்கப்பட்டுள்ளன. தல வரலாறுக்ள் முழுமையாக உள்ளன.