நம் பாரத்த் திரு நாட்டில் உஜ்ஜயினிப் பட்டணத்தை ஆண்டு வந்த விக்கிரமாதித்த மாமன்னனின் வீர தீர சாகஸங்களையும், அறிவையும் ஆற்றலையும், அஞ்சா நெஞ்சத்தையும்,மதி நுன்பத்தையும், கொடை வளத்தையும்,தியாக குணத்தையும், அருமைகளையும் பெருமைகளையும் செங்கோல் திறத்தையும் வியந்து சிற்ப்பித்துப் புகழ்ந்துரைக்கும் கதைகள் பல, ஆண்டாண்டுகளாக,பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகின்றன. அவை கேட்பவரையும், படிப்பவரையும் அதிசயப்பட வைக்கின்றன. ஆச்சரியத்திலாழ்த்துகின்றன. மகிழ்ச்சியில் திளைக்க வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன.சிரிக்கவும் வைக்கின்றன.பரவசப்படுத்துகின்றன