இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்து சிறுகதைகளும் வெவ்வேறான கதைக்கருவைக்கொண்டவை என்றாலும் கருவும், கதை மாந்தர்களும் நடப்பியல் சார்ந்தவை. நிகழ்கால நிகழ்வுகளை மையமிட்டவை. நம்மில் இருந்து தொடங்கி நாம் சந்திக்கும் மனிதர்கள், பார்க்கும் நிகழ்வுகள், படிக்கும் செய்திகள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த கதை வார்ப்புகள்.