மனிதன் வாழ்வின் வளர்ச்சி நிலையில் தன்னை முன்னிறுத்திக்கொண்டுள்ளது மொழி. உலக மொழிகளில் மூத்த மொழியாய் தன்னேர் இல்லாத மொழியாய் விளங்கி வருவது தாய்மொழி. இம்மொழி மக்கள் வாழ்வோடு இயைந்து ஆட்சிமொழியாக, கல்விமொழியாகத் திகழும்போதுதான் தனது பணியின் பங்கை நிறைவு செய்ததாகிறது. அவ்வகையில் தமிழ் மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி என்னும் தலைப்பில் அமைந்த இந்நூல் தமிழ்மொழியின் மேன்மையைச் சுட்டியும் ஆட்சி மொழியாகத் தான் பொறுப்பேற்கத் தமிழ் மொழியானது தம் நாட்டிலேயே போராட வேண்டியுள்ள எதார்த்த அவலச் சூழலை உணர்த்தியும், கல்விமொழியாகத் தமிழ்மொழி விளங்க இன்றைய சூழலில் விரைந்து மேற்கொள்ள வேண்டிய சில ்செயல்பாடுகளைத் தக்க ஆதாரங்களோடு கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. மொழி வளர்ச்சிநோக்கில் ஒரு மொழியை அணுகுவோருக்கு தெளிவானதொரு திசை காட்டியாய் இந்நூல் விளங்கும் எனலாம்