எங்கு நோக்கிலும் புதுமைகள்! புதுமைகள்! டி.பி.ஏ. எனும் மருந்து வருவதற்கு முன் ஸ்ட்ளேப் டோகிளேஸ் எனும் மருந்து பயன்படுத்தப்பட்டது. மாரடைப்பு நோய்வந்து அவதிப்படுவோர்க்கு இரத்தக் குழாய்களுக்குச் சரியான அளவில் டி.பி.ஏ. (டிஷ்யுப்ளாஸ் மனோஜென் ஆக்டிவேட்டர்) செலுத்தினால் 90 விழுக்காடு நோயாளிகளின் கட்டி கரைந்து நிவாரணம் ஏற்படுகிறது எனக் கண்டார்கள். இப்போது இது ஒர் அருமருந்தாக பரமசஞ்சீவியாகக் கருதப்படுகிறது.