ஒரு மொழி வளர்ச்சிக்கும், அம் மொழியின் அழியா இளமை நலத்துகும் உரைநடையினும் செய்யுள் நடையே சிறந்ததாகும். இது, இலக்கிய வளமும், இலக்கண வரம்பும் உடைய எல்லா மொழிகட்கும் ஒத்த இயல்பினதாகும். தமிழ் மொழியின் பழமைக்கும் இளமைக்கும் செழுமைக்கும் வளமைக்கும் தமிழிலுள்ள செய்யுள நூற்களே சிறந்த காரணமாகும். தமிழ்க் குழவியை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்த்துவரும் செல்வச் செவிலி செய்யுள் நடையேயாகும்.